வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் நாகை மாவட்ட குடிக்காணி மற்றும் குத்தகை சாகுபடிதாரர்கள் விவசாய பாதுகாப்பு சங்கம் செயற்குழு கூட்டம் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது.. கவுரவ தலைவர் புயல்குமார் முன்னிலை வகித்தார்.குடிக்காணி நிலங்களில் குடியிருப்போருக்கு மீண்டும் பத்திரப்பதிவு முறையை அமல் படுத்த வேண்டும். கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு வீடுகட்டி கொள்ள பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.