வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்க நடவடிக்கை

வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து கூறினார்.

Update: 2023-07-02 16:59 GMT

மாநாடு

தாராபுரம் அருகே உள்ள சந்திராபுரத்தில் 5-ந் தேதி உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தியாகிகள் தின மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை பார்வையிட நேற்று உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து தாராபுரம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகளின் கோரிக்கைக்காக நடந்த போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கான மாநாடு தாராபுரத்தில் 5-ந் தேதி நடக்கிறது. அந்த மாநாட்டில் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து தேங்காய் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஒரு காலி மதுபாட்டில் கொடுத்தால் 10 ரூபாய். ஆனால் உழைத்து உற்பத்தி செய்த தேங்காய் 8 ரூபாய்.

தேங்காயை விவசாயிகளிடம் இருந்து முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும். எனவே அதை முழுமையாக கோரிக்கையை இந்த மாநாட்டிலே எடுத்து இருக்கிறோம்.

மேலும் பால், வெங்காயம், மக்காச்சோளம் போன்ற வேளாண் உற்பத்தி பொருள் அனைத்திற்கும் கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும் என்று மாநாட்டிலே வலியுறுத்த இருக்கிறோம்.

ஆனைமலை திட்டத்திற்கு ஒரு தீர்வு காண வேண்டும். உடனடியாக அதற்கு நிதி ஒதுக்க அறிவிப்பு செய்ய வேண்டும். கர்நாடக மந்திரி தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட விடமாட்டேன் என்று சொல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி அந்த தண்ணீரை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இழப்பீடு

தமிழ்நாடு அரசு வணிக நிறுவனிகர்களுக்கான மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய நிலம் இழப்பீடு தொகையை பொதுப்பணித்துறையினர் உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஈரோடு மாவட்ட தலைவர் மகுடேஸ்வரன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்