வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளியில் அகஸ்தியர் கோவில் என்று அழைக்கப்படும் பாகம்பிரியாள் அம்மன் சமேத அக்னிபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வேதாரண்யேஸ்வரர் கோவிலை சார்ந்தது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் குடமுழுக்கு நடந்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நாளை(புதன்கிழமை) குடமுழுக்கு நடந்தது. அகத்திய மாமுனிவருக்கும், அக்னிபுரீஸ்வரருக்கும் ,ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும், கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள கொன்றை மரத்து விநாயகருக்கும் நாளை காலை 10.30-க்கு மேல் 11.30-க்குள் குடமுழுக்கு நடக்கிறது. இதில் அமைச்சர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், உபயதாரர்கள், நன்கொடையாளர்கள், திருப்பணி கமிட்டியினர் கலந்து கொள்ள உள்ளனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி கமிட்டியினர் மற்றும் கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.