சத்துணவு-அங்கன்வாடி மைய ஊழியர்கள் சங்கம் சார்பில் கிளர்ச்சிபிரசாரம்

சத்துணவு-அங்கன்வாடி மைய ஊழியர்கள் சங்கம் சார்பில் பிரசாரம்

Update: 2023-10-16 14:33 GMT

திருப்பூர்

வெள்ளகோவில், காங்கயம் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு கிளர்ச்சி பிரசாரம் நேற்று நடைபெற்றது. பிரசாரத்திற்கு காங்கயம் ஒன்றிய துணைத்தலைவர் சுசிலா தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,750 வழங்க வேண்டும், அரசு துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை சேர்த்து முறையான காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வெள்ளகோவில் ஒன்றிய தலைவர் ரதி வரவேற்புரையாற்றினார், அரசு ஊழியர்கள் சங்கம் மாநிலச் செயலாளர் செந்தில்குமார் தொடக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் வெள்ளகோவில் ஒன்றிய கன்வினர் முருகன், காங்கயம் ஒன்றிய கன்வீனர் மோகன், சத்துணவு ஊழியர்கள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ராமசாமி, சத்துணவு ஊழியர்கள் சங்கம் மாநிலத் துணைத் தலைவர் குப்புசாமி, அரசு ஊழியர்கள் சங்கம் முன்னாள் மாவட்ட தலைவர் ஞானசேகரன், மாநில செயலாளர் ரீட்டா, மாவட்ட தலைவர் கே. முத்தமிழ்ராஜ், காங்கயம் ஒன்றிய பொருளாளர் ராஜதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்