திருவாரூரில், பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில், பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-05-21 00:30 IST

விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் பாலியாகி உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து பா.ஜனதா மகளிர் அணி சார்பில் திருவாரூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் ரமாமணிபாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் அரசன், மாவட்ட தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். இதில் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் சங்கர், பட்டியல் அணி மாவட்ட தலைவர் மாதவன், மாநில செயற்குழு உறுப்பினர் ரஜினி கலைமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்