திருத்துறைப்பூண்டியில் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
திருத்துறைப்பூண்டியில் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு இந்தியை தமிழக மாணவர்கள் மீது திணிப்பதை கண்டித்து திருத்துறைப்பூண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட துணை செயலாளர் சுந்தரி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் அனுஷ் மித்ரன், ஒன்றிய துணை செயலாளர் தரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு இந்தி திணிப்பை கண்டித்து கோஷம் எழுப்பினர்.