சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2022-08-10 22:55 IST
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சி அமைப்புகள் மூலமும், அம்மா உணவகங்கள் மூலமும் வெளியில் சமைத்து பள்ளிகளில் காலை உணவு வழங்குவதற்கு பதிலாக, பள்ளி சத்துணவு மையங்களில் காலை உணவை சமைத்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் ரம்யா தலைமை தாங்கினார். இதேபோல் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் திருமருகல் ஒன்றிய அலுவலகத்தில் சங்க ஒன்றிய தலைவர் உஷா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்