அக்னிபத் திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி திருவாரூரில், இளைஞர்-மாணவர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில், இளைஞர்-மாணவர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் 'அக்னிபத்' திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி திருவாரூரில் இளைஞர்-மாணவர் மன்றம், இந்திய மாணவர்-ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தவைலர் சலாவுதீன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஹரிசுர்ஜித் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.