வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம், அணைக்குடத்தில் சென்னை ஐகோர்ட்டு வக்கீலான கும்பகோணத்தை சேர்ந்த சாமிநாதன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அதில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரியும், வாணியம்பாடி வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் தேவகுமாரை தாக்கிய சமூக விரோதிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பெரம்பலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பார் அசோசியேசன் தலைவர் வள்ளுவன் நம்பி, பெரம்பலூர் அட்வகேட்ஸ் அசோசியேசன் தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் அந்தந்த அசோசியேசனை சேர்ந்த வக்கீல்கள் பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டையில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் அந்த கோர்ட்டுகளில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் அவர்கள் வக்கீல்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை தமிழக போலீசார் தடுத்திட வலியுறுத்தியதோடு, வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும், என்றனர்.