பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த ஆலோசனை

பள்ளி செல்லா குழந்தைகள் மீட்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-07-16 18:23 GMT

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை கரூர் வட்டார வளமையத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் மீட்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சத்யாபதி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் மணிமாலா, வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்கள் இல்லாத நிலையினை உருவாக்க தலைமை ஆசிரியர்களுடன், அலுவலர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும், பள்ளிசெல்லா குழந்தைகள் அதிகமாக உள்ள குடியிருப்புகளான நீலிமேடு, வேட்டைக்காரன் புதூர் ஆகிய பகுதிகளில் தொடர் கள ஆய்வு வேண்டும் என அறிவுறுத்தப்பட்டன. இதில், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்