மதுரையில் துணிகரம்: ஓடும் ரெயிலில் ஏறி பயணிகளிடம் செல்போன் பறிப்பு- 4 வாலிபர்கள் கைது

ஓடும் ரெயிலில் ஏறி, பயணிகளிடம் செல்போன்கள் பறித்துவிட்டு தப்பிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-07 20:45 GMT


ஓடும் ரெயிலில் ஏறி, பயணிகளிடம் செல்போன்கள் பறித்துவிட்டு தப்பிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மெட்ரோ ஊழியர்

மதுரை ஆரப்பாளையம் மேலபொன்னகரம் 2-வது தெருவை சேர்ந்தவர் சிவபெருமாள். இவருடைய மகன் விக்னேஷ் (வயது 24). இவர், சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரெயில் டெப்போவில் ஏ.சி. டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், சித்திரை திருவிழாவிற்கு தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர் ரஞ்சித்துடன் மதுரைக்கு வந்திருந்தார்.

பின்னர் மதுரையில் இருந்து சென்னை செல்வதற்கு அவர்கள் இருவரும் மதுரை ரெயில் நிலையம் வந்தனர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்ய முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டியில் ஏறினர். ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கழிவறை அருகே உள்ள கதவு பகுதியில் நின்று கொண்டிருந்தனர்.

மதுரை மதுரா கோட்ஸ் பாலம் அருகே ெரயில் மெதுவாக சென்று கொண்டிருந்தபோது, தண்டவாளம் அருகில் நின்றிருந்த வாலிபர்கள் கும்பலாக ரெயிலில் ஏறி, விக்னேஷ், மற்றொரு பயணி மணிகண்டன் ஆகியோரிடம் இருந்த செல்போன்களை பறித்துக் கொண்டு ரெயிலில் இருந்து இறங்கி ஓடி விட்டனர்.

விசாரணை

இதுகுறித்து, மதுரை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ெசய்யது குலாம், ேபாலீசார் பழனிக்குமார், பாலகிருஷ்ணன், சஞ்சய், செந்தில், செந்தில்குமார், திருமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், செல்போன்களை பறித்து சென்றது, ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற குட்டி புலி (25) புதுவிளாங்குடியை சேர்ந்த அஜய் குகன் (21), மணிநகரம் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் (29), சீனிவாசன் (19) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் தத்தனேரி ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழ் ரெயில்வே தண்டவாள பகுதியில் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்