போதை பொருட்களுக்கு எதிராக இளைஞர்கள் உறுதி மொழி ஏற்பு
போதை பொருட்களுக்கு எதிராக இளைஞர்கள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவுப்படி, போலீஸ் துணை கமிஷனர் (தெற்கு) ஸ்ரீதேவி வழிகாட்டுதல்படி போதை பொருட்களுக்கு எதிராக மாநகர போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் நேற்று இந்திராநகர், ராமச்சந்திராநகர் பகுதிகளில் இளைஞர்களுக்கு கஞ்சா, குட்கா போன்ற போதை தரும் பொருட்களை பயன்படுத்துவதால் உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்படுவது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார். பின்னர் போதை பொருட்கள் பயன்படுத்த மாட்டோம் என இளைஞர்களை உறுதிமொழி ஏற்க வைத்தார்.