சிறுமி கடத்தல் வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

சிறுமி கடத்தல் வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-06 17:16 GMT

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், கூவத்தூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சின்னப்பராஜ் மகன் ஜான்பிரிட்டோ (வயது 24). இவர் 10-ம் வகுப்பு படித்து வரும் ஒரு சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த மாதம் 9-ந் தேதி ஜான்பிரிட்டோ கைது செய்யப்பட்டு ஜெயங்கொண்டம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணாவிடம் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர், ஜான் பிரிட்டோவை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஜான் பிரிட்டோ குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்