'கூட்டணி குறித்து முடிவு செய்யும் கட்சி அ.தி.மு.க. தான்' - அண்ணாமலை பேச்சுக்கு ஓ.எஸ்.மணியன் பதிலடி

யாருக்கு எத்தனை சீட்டு கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் கட்சி அ.தி.மு.க. தான் என்று ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.;

Update:2023-03-18 11:14 IST

சென்னை,

சென்னை அமைந்தகரையில் நடந்த அவசர கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணமாலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன்.

திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை. பா.ஜ.க.வை வலுப்படுத்த வேண்டும், கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

அ.தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட வேண்டும் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த நிலையில், அண்ணாமலையின் இந்த பேச்சு பா.ஜ.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அண்ணாமலையின் பேச்சு குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அ.தி.மு.க. தான் தமிழ்நாட்டில் கூட்டணியை முடிவு செய்யும், கூட்டணிக்கு தலைமை ஏற்கும். யாருடன் கூட்டணி, யாருக்கு எத்தனை சீட்டு கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் கட்சி அ.தி.மு.க. தான்" என்று தெரிவித்தார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்