அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பளிக்கிறது.

Update: 2023-08-25 01:20 GMT

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கவும், கட்சியில் இருந்து தங்களை நீக்கியது உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்தும், சென்னை உயர் நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் தனித்தனியே மனு தாக்கல் செய்தனர். தடை கோரிய மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து 4 பேரும் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் மீது நடைபெற்ற வாதங்களுக்குப் பிறகு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது. நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி சபீக் முகமது ஆகியோர் அடங்கிய அமர்வில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்