உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்துக்கு அ.தி.மு.க. நிதி உதவி

உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்துக்கு அ.தி.மு.க. நிதி உதவியை மாவட்ட செயலாளர் முனியசாமி வழங்கினார்.

Update: 2023-04-03 18:45 GMT

பாம்பன் தெற்குவாடியை சேர்ந்த மீனவர்கள் கங்காதரன், பாண்டி முனீஸ்வரன் ஆகியோர் மீன்பிடிக்க சென்றபோது கடலில் தவறி விழுந்து உயிரிழந்தனர். இதுபற்றி அறிந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டார். அதன்பேரில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மண்டபம் கிழக்கு ஒன்றியம், தகவல் தொழில் நுட்ப பிரிவு மற்றும் பாம்பன் கிளை சார்பில் நிவாரண பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கினார். இதில் அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன், மாவட்ட இணைச்செயலாளர் கவிதா சசிகுமார், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜானகிராமன், அவைத்தலைவர் முத்தாண்டி, மண்டபம் பேரூர் செயலாளர் சீமான் மரைக்காயர், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், நகர் செயலாளர் பால்பாண்டியன், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சரவணகுமார், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் இளையராஜா, மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் செல்வராஜ் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்