அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. புகார்

உதயநிதி அவதூறாக பேசுவதாகவும், அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கக் கூடாது என்றும் புகாரில் அதிமுக தெரிவித்துள்ளது.

Update: 2024-04-01 14:09 GMT

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. வக்கீல் பிரிவு செயலாளர் இன்பதுரை அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 31-ந் தேதி கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது எதிர்க்கட்சியினர் மீது சில அவதூறு வார்த்தைகளை கூறினார். அமைச்சராக இருப்பவர் கூறும் அதுபோன்ற வார்த்தைகள், அரசியல் கட்சியினர் மற்றும் வாக்காளர்களுக்கு இடையே விரோதத்தை உருவாக்குவதாக உள்ளன.நல்லிணக்கத்திற்கு ஆபத்தாக அவரது வார்த்தைகள் காணப்படுகின்றன.

மேலும் இது அனைத்து எதிர்க்கட்சிகளின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதோடு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையையும் உருவாக்கிவிடும். அவர் கூறிய வார்த்தைகள், தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அவருக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கக் கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்