அமைச்சர் மெய்யநாதன் குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்ட அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு

அமைச்சர் மெய்யநாதன் குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்ட அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-08-14 18:48 GMT

கீரமங்கலம் அருகே உள்ள செரியலூர் இனாம் கிராமத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சங்கர் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான மெய்யநாதன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் செய்யும் போது 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த பெண்களை பார்த்தவுடன் காரில் இருந்து கீழே இறங்கி அவர்களிடம் நலம் விசாரித்தார்.

இந்தநிலையில், அ.தி.மு.க. பிரமுகரான செரியலூர் ஜெமின் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகநாதன் அந்த படங்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு அமைச்சர் குறித்து அவதூறாக கருத்துகளை பதிவிட்டு உள்ளார். எனவே அமைச்சர் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட சண்முகநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்