அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் மரணம்
சங்கராபுரம் அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் மரணம்
சங்கராபுரம்
சங்கராபுரம் அ.தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளரும், சங்கராபுரம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவரும், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை-1 தலைவருமான எஸ்.எஸ்.அரசு நேற்று முன்தினம் இரவு சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் காலமானார். அவருக்கு வயது 65. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் சொந்த ஊரான சங்கராபுரம் அருகே உள்ள மணலூருக்கு எடுத்து வரப்பட்டது. அரசுவின் உடலுக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு, கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ப.மோகன், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ராஜசேகர் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் அ.தி.மு.க. மாவட்ட அவைதலைவர் பச்சையாபிள்ளை, கூட்டுறவு சர்க்கரை ஆலை கொள்முதல் கமிட்டி தலைவர் கோவிந்தன், நகர செயலாளர் நாராயணன், மாவட்ட ஆவின் ஒன்றியக்குழு தலைவரும், தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளருமான ஆறுமுகம், வடக்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் சன்னியாசி, தி.மு.க நகர செயலாளர் துரை தாகப்பிள்ளை, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திலகவதிநாகராஜன் மற்றும் வக்கீல்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், பல்வேறு கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சேவை அமைப்பினர் அரசுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அரசுவின் மறைவுக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து கடிதம் அனுப்பினார். மரணம் அடைந்த அரசுவுக்கு தேனார்மொழி என்ற மனைவியும், இளந்தேவன் என்ற மகனும், இளம்பிறை என்ற மகளும் உள்ளனர்.