அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
சீர்காழியில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.;
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 18, 24-வது வார்டுகளில் அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. முகாமிற்கு நகர கழகச் செயலாளர் வினோத் தலைமை தாங்கினார். வார்டு செயலாளர் மணி வரவேற்றார். நகர பேரவை செயலாளர் மணி, நகர துணை செயலாளர் பரணிதரன், முன்னாள் நகர சபை தலைவர் இறைஎழில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரமோகன் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர். பின்னர் பூத் கமிட்டி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் நகரப் பொருளாளர் மதிவாணன், நகர் மன்ற உறுப்பினர் நாகரத்தினம் செந்தில், கட்சி நிர்வாகிகள் சுசீந்திரன், கண்ணதாசன், வக்கீல் பாலசுப்பிரமணியன், நகர் மன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, வார்டு செயலாளர்கள் சுரேஷ், லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுரேஷ் பாபு நன்றி கூறினார்.