பாவூர்சத்திரத்தில் அ.தி.மு.க. கூட்டம்

பாவூர்சத்திரத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-03-10 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் கட்சி மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. கட்சியின் அமைப்பு செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் எஸ்.கே.சண்முகசுந்தரம் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் காத்தவராயன், மாவட்ட இணை செயலாளர் முத்துலட்சுமி, மாவட்ட துணைச் செயலாளர் பசுவதி, மாவட்ட பொருளாளர் லாட சன்னியாசி என்ற சாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் கசமுத்து, பாண்டியராஜ், மாவட்ட சார்புஅணி செயலாளர்கள் சிவ சீத்தாராம், குத்தாலிங்கம், ராஜ் என்ற சுப்பையா, ஒன்றிய செயலாளர்கள் அமல்ராஜ், இருளப்பன், பாலகிருஷ்ணன், என்.எச்.எம்.பாண்டியன், அருவேல்ராஜ், முருகேசன், நகர செயலாளர்கள் சக்திவேல், சுடலை, பேரூர் செயலாளர்கள் கார்த்திக் குமார், சங்கர், சுப்பிரமணியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்