முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு கொரோனா

அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-06-27 07:19 GMT

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் மெல்ல அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுஇடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் ஈபிஎஸ் இல்லத்தில் நடந்த ஆலோசனைகளில் கடம்பூர் ராஜூ பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்