'அண்ணாமலையை மாற்றி பின்லேடனே வந்தாலும்...' - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி

அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.;

Update:2024-06-17 21:18 IST

சென்னை,

அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றிபெற வேண்டுமென திமுக செயல்படும். விக்கிரவாண்டி தொகுதியில்தான் முழு அரசு இயந்திரமும் செயல்படும். ஈரோடு இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என்பதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை' என்றார்.

பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டால் அதிமுக - பாஜக கூட்டணி ஏற்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார்,

அண்ணாமலையை மாற்றி பின்லேடனே வந்தாலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி கிடையாது. முன்வைத்த காலை அதிமுக பின்வைக்காது' என்றார்.

ஆந்திராவில் தமிழிசை சவுந்தரராஜனை மேடையில் வைத்து பாஜக தலைவர் அமித்ஷா கண்டித்ததை எவ்வாறு பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், அது உட்கட்சி விவகாரம். மேடை நாகரீகம் என்று ஒன்று உள்ளது. அப்படியிருக்கும் சூழ்நிலையில் அவர் பேசியது சரியா? தவறா? என்று நான் கூற விரும்பவில்லை உண்மையில் அண்ணாமலை வந்த பிறகு பாஜக கூடாரமே சமூக விரோதிகள் கூடாரமாக மாறிவிட்டது என்று தமிழிசை தெளிவுபடுத்தியுள்ளார். அதை நான் கூறாமலும் இருக்க முடியாது. அதை தமிழிசை கூறிவிட்டார். அதை கூறியதற்கு அவரை அழைத்து கண்டித்திருக்க வேண்டுமென்றால் டெல்லிக்கு அழைத்து அலுவலகத்தில் வைத்து கண்டித்திருக்கலாம், ஆனால் ஒரு பொதுமேடையில் பெண் என்றும் பாராமல் கோபமான கடுமையான வார்த்தைகளை பயன்படுத்திருக்கலாம். ஒரு பெண்மணியை மேடையில் வைத்து உள்துறை மந்திரி அவமானப்படுத்துவது தவறு' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்