அ.தி.மு.க.வில் இணைந்த அ.ம.மு.க.வினர்

நெல்லையில் அ.தி.மு.க.வில் அ.ம.மு.க. கட்சியினர் இணைந்தனர்.

Update: 2023-09-16 20:32 GMT

அ.ம.மு.க நெல்லை மாநகர பொருளாளர் பாளை. ரமேஷ் தலைமையில் நெல்லை மாநகர பகுதி செயலாளர்கள் ஸ்டார் அய்யப்பன், செல்வ சேகரன், நாகராஜன், கபடி காஜா, விக்டர் மற்றும் பி.ஆர்.பி.ராஜா, சண்முகராஜ் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் அந்த கட்சியில் இருந்து விலகினர்.

பின்னர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அ.தி.மு.க நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் அனைவரும் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு தச்சை கணேசராஜா சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.பி.ஆதித்தன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி கல்லூர் வேலாயுதம், மாவட்ட அவை தலைவர் பரணி சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்