சிலைக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க.வினர் மரியாதை

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. சிலைக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.

Update: 2023-01-17 19:30 GMT

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. சிலைக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.

எம்.ஜி.ஆர். பிறந்த நாள்

நாமக்கல் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நடந்தது. விழாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி.பி.பாஸ்கர் தலைமை தாங்கினார். அவர் செலம்பகவுண்டர் பூங்கா அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை, ஏ.எஸ்.பேட்டை, பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இதேபோல் நாமக்கல் ஒன்றியம் மற்றும் புதுச்சத்திரம் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி.பி.பாஸ்கர் எம்.ஜி.ஆர். உருவபடத்திற்கு மாலை அணிவித்து, கட்சியினருக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சிகளில் பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் சேகர், கோபிநாத், ராஜா, நகர அவை தலைவர் விஜய்பாபு, நல்லிபாளையம் கூட்டுறவு வங்கி தலைவர் விஜயகுமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் சிவசிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராசிபுரம்

ராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றியத்தில் முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி உள்பட ஒன்றியம் முழுவதும் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா மேற்கு ஒன்றிய செயலாளர் கே.பி.எஸ்.சரவணன் தலைமையில் நடந்தது. எம்.ஜி.ஆர் படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கலாவதி, ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், பேரூர் அதிமுக செயலாளர்கள் மணிக்கண்ணன் (நாமகிரிப்பேட்டை), செந்தில்குமார் (சீராப்பள்ளி) உள்பட கட்சி நிர்வாகிகள், அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

தங்கமணி எம்.எல்.ஏ.

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நேற்று நாமக்கல் மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பள்ளிபாளையம் ஆவரங்காடு சனிசந்தை பகுதியில் நடந்த விழாவுக்கு நகர செயலாளர் பி.எஸ்.வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ. பேசுகையில், இன்று 2 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் ஏதாவது ஒரு திட்டம் மக்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளதா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மக்கள் நல திட்டங்களை கொண்டு வந்தார். எனவே எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்றார்.

விழாவில் ஒன்றிய செயலாளர்கள் எஸ்.செந்தில் (தெற்கு), குமரேசன் (வடக்கு), ஜெயலலிதா பேரவை செயலாளர் டி.கே.சுப்ரமணி, நகர துணை செயலாளர் ஜெய்கணேஷ், ஆலாம்பாளையம் பேரூர் செயலாளர் செல்லதுரை, படைவீடு பேரூராட்சி செயலாளர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு

திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் அ.தி.மு.க. நகர செயலாளர் அங்கமுத்து தலைமையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனி பகுதியில் நடந்த விழாவில் அங்கமுத்து தலைமை தாங்கினார். நகராட்சி கவுன்சிலர் மல்லிகா முன்னிலை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு வடக்கு ஒன்றியம் வட்டூர் ஊராட்சி மோர்பாளையத்தில் நடந்த விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் டி.சந்திரசேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஊராட்சி தலைவர் பிரபாகரன், கவுன்சிலர் சுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் எம்.எல்.ஏ.

திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் பகுதிகளில் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பொன் சரஸ்வதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் முருகேசன், மாவட்ட தொழில் சங்க தலைவர் பழ ராமலிங்கம், திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் மோகன், ராஜன், ஒன்றிய குழு தலைவர் அலமேலு, பேரூர் செயலாளர் சுந்தரராஜன், ஊராட்சி தலைவர் மஞ்சுளா, தகவல் தொழல்நுட்பப்பிரிவு ஒன்றிய செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் ஜெயலலிதா பேரவை செயலாளர் சந்திரசேகர் முன்னிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன் சரஸ்வதி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் புரட்சி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர். வேடம் அணிந்த ஒருவர், ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கினார்.

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா சேகர் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாமக்கல் ஆவின் தலைவர் ராஜேந்திரன், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜே.பி.ரவி, வெங்கரை பேரூராட்சி தலைவர் விஜயகுமார், துணை தலைவர் ரவீந்தர்உள்பட பலர் கலந்து கொண்டனர். பரமத்தி ஒன்றிய பகுதியில் ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் தலைமையில் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி, பரமத்தி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திலகவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொத்தனூர் பேரூராட்சியில் நடந்த விழாவில் பொத்தனூர் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் எஸ்.எம்.நாராயணன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பரமத்தி பேரூராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் சுகுமார் தலைமையில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வேலூர் பேரூராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் பொன்னிவேலு தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் தனசேகரன், லோகநாதன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தமிழ்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்