அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
உடன்குடியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.
உடன்குடி:
உடன்குடி பஜார் அண்ணா திடலில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்கம் குறித்த திருச்செந்தூர் தொகுதி அளவிலான பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஆழ்வார்திருநகரி ஒன்றிய அ.தி.மு.க. செயலர் கே.விஜயகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலர்கள் ராமச்சந்திரன், ராஜ்நாராயணன், சவுந்திரபாண்டி, காசிராஜன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் உடன்குடி குணசேகரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து விளையாட்டுக் குழுக்களுக்கு உபகரணங்கள், பெண்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். இதில் தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் ஞானதாஸ், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலர்கள் விஜயராஜ், சுரேஷ்பாபு, மாவட்ட பிரதிநிதி சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். உடன்குடி நகர ஜெயலலிதா பேரவை செயலர் ரெங்கன் நன்றி கூறினார்.