தஞ்சை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சங்களை விளக்கிடும்வகையில் பொதுக்கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி பகுதி முன்னாள் செயலாளர் வக்கீல் சரவணன் தலைமை தாங்கினார், . ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் துரை.திருஞானம், எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் சேகர், முன்னாள் மேயர் சாவித்திரிகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் கல்யாணசுந்தரம், அ.தி.மு.க. பேச்சாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு அ.தி.மு.க. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி பேசினர். கூட்டத்தில் அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சிங்.ஜெகதசீசன், பொதுக்குழு உறுப்பினர் கவிதாகலியமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் சாமிவேல், கலியமூர்த்தி, இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மருத்துவக்கல்லூரி பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் மனோகர் நன்றி கூறினார்.