அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிமீது குண்டர் சட்டம் பாய்ந்தது

குண்டர் சட்டம்

Update: 2022-12-17 19:30 GMT

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கடத்தல்

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புஜங்கனூரை சேர்ந்தவர் எஸ்.ஈஸ்வரன். இவா் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார்.

கடந்த 14-8-2022 அன்று முன்னாள் எம்.எல்.ஏ.வான எஸ்.ஈஸ்வரன், புஞ்சைபுளியம்பட்டியை அடுத்த பனையம்பள்ளி- பவானிசாகர் ரோடு மல்லியம்பட்டி வனப்பகுதி அருகே சிலரால் கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட அவர் சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து ரூ.1½ கோடியையும் அந்த கும்பல் அபகரித்தது.

கைது

இதுகுறித்த புகாரின் பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் வழக்கில் தெர்டர்புடையதாக மோகன், கர்ணன், பிரைட் பால், கண்ணன், சீனிவாசன், தர்மலிங்கம் ஆகிய 6 பேர் கும்பலை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான மிலிட்டரி சரவணன் என்பவர் ஈரோடு கோர்ட்டில் சரண் அடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் சத்தியமங்கலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

குண்டர் சட்டம்

இந்தநிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. கடத்தலில் தொடர்புடைய மிலிட்டரி சரவணனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டா் கிருஷ்ணனுண்ணிக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பரிந்துரை செய்தார். அவருடைய பரிந்துரையின் பேரில் மிலிட்டரி சரவணனை சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் கிளை சிறையில் இருந்து மிலிட்டரி சரவணனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிைறக்கு அழைத்து சென்று அடைத்தனர்.

மிலிட்டரி சரவணன் மீது ஏற்கனவே சத்தியமங்கலம் பகுதியில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்