அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
ின்கட்டணம், சொத்துவரி உயர்வை கண்டித்து நெல்லை மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்கட்டணம், சொத்துவரி உயர்வை கண்டித்து நெல்லை மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசின் மின்கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி நெல்லை அருகே உள்ள சங்கர்நகர் மற்றும் நாரணம்மாள்புரம் பேரூர் அ.தி.மு.க. சார்பில் தாழையூத்து பஜாரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட அ.தி.மு.க செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். நாரணம்மாள்புரம் பேரூர் செயலாளர் செல்லப்பாண்டியன், சங்கர்நகர் பேரூர் செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
சேரன்மாதேவி
சேரன்மாதேவி, பத்தமடை, மேலச்செவல், கோபாலசமுத்திரம் ஆகிய பேரூர் அ.தி.மு.க. சார்பில் சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் தலைமை தாங்கி பேசினார்.
எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட துணைச் செயலாளர் கவிதா பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் செவல் முத்துசாமி, சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், நகரச் செயலாளர்கள் சேரன்மாதேவி பழனிகுமார், பத்தமடை சங்கரலிங்கம், மேலச்செவல் முருகன், கோபாலசமுத்திரம் திருமலை நம்பி, சேரன்மாதேவி பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் இசக்கி பாண்டியன், தமிழரசி ஐசக், மேலச்செவல் பேரூராட்சி முன்னாள் தலைவர் மலைராஜா முருகேசன், கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் நயினார், வக்கீல் மாரிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மூலைக்கரைப்பட்டி-ஏர்வாடி
மூலைக்கரைப்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.ஆதித்தன், மாநில ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் ஜெகநாதன் என்ற கணேசன், ஒன்றிய செயலாளர்கள் சங்கரலிங்கம், முத்துக்குட்டி பாண்டியன், நகர செயலாளர் அசோக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ஏர்வாடி மற்றும் திருக்குறுங்குடி பேரூராட்சி அ.தி.மு.க. சார்பில் ஏர்வாடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் பி.நாராயணபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபூப்ஜான், களக்காடு ஒன்றிய செயலாளர் ஜெயராமன், நகர செயலாளர்கள் முருகன், பாபு, முன்னாள் ஒன்றிய செயலாளர் குழந்தைவேல் பாண்டியன், படலையார்குளம் தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திசையன்விளை
திசையன்விளை நகர அ.தி.மு.க. சார்பில் திசையன்விளை பழைய பஸ்நிலைய சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி செயலாளரும், திசையன்விளை பேரூராட்சி தலைவருமான ஜான்சிராணி, ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அ.தி.மு.க. செயலாளரும், பேரூராட்சி துணைத்தலைவருமான ஜெயக்குமார் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி அரிக்கேன் விளக்குகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர். இதில் பேரூராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
பணகுடி-முக்கூடல்
பணகுடியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞரணி செயலாளர் பால்துரை தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், அம்மா செல்வகுமார், அகிலன், ராஜா, பணகுடி நகர செயலாளர் ஜெயினுலாப்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கூடல் வம்பளந்தான் முக்கில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முக்கூடல் பேரூர் நகர செயலாளர் வில்சன் தலைமை தாங்கினார். பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் டி.கே.சுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பிரேம்குமார், ஒன்றிய அவைத்தலைவர் செல்லப்பா பாண்டியன் கலந்து கொண்டனர்.
கல்லிடைக்குறிச்சி
கல்லிடைக்குறிச்சியில் நகர அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். அம்பை நகர செயலாளர் அறிவழகன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.