ஏத்தாப்பூர் பேரூராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

ஏத்தாப்பூர் பேரூராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2022-08-26 21:55 GMT

பெத்தநாயக்கன்பாளையம்:

ஏத்தாப்பூர் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பேசும் போது, ஏத்தாப்பூர் பேரூராட்சி பகுதிகளில் லட்சக்கணக்கான மதிப்பிலான புளிய மரங்களை வெட்டி கடத்தி உள்ளனர். இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினர். மேலும் இதை வலியுறுத்தி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கிட்டு என்கிற பாலகிருஷ்ணன், வசந்தா, கனகவள்ளி, ஜெயபாரதி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூறுகையில், புளியமரங்களை வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்