தலைஞாயிறில், அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தலைஞாயிறில், அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-28 19:00 GMT

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை கொண்டாடும் விதமாக நாகை மாவட்டம் தலைஞாயிறு கடைத்தெருவில் அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அப்போது அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா பேரவை நகர செயலாளரும், தலைஞாயிறு பேரூராட்சி துணைத்தலைவருமான கதிரவன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர் அருணா மாரிமுத்து, முன்னாள் கவுன்சிலர் கட்டப்பா, நகர பொருளாளர் குமரன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி சுரேஷ்குமார், கட்சி நிர்வாகி பாஸ்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்