அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

அம்பையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.;

Update:2023-10-27 02:25 IST

அம்பை:

அம்பை சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயண பெருமாள், அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. மருத்துவ அணி இணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், அவர்களது பணிகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்டவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, மாவட்ட துணை செயலாளர் செவல் முத்துசாமி, ஞான புனிதா, ஒன்றிய செயலாளர்கள் அம்பை விஜயபாலாஜி, சேரை மாரிசெல்வம், ராதாபுரம் அந்தோணி அமலராஜா, செல்வராஜ், முத்துகுட்டி பாண்டியன், நகர செயலாளர்கள் அம்பை அறிவழகன், விக்கிரமசிங்கபுரம் கண்ணன், கல்லிடை முத்துகிருஷ்ணன், சேரை பழனிகுமார், அம்பை நீர்ப்பாசன கமிட்டி தலைவர் மாரிமுத்து, மணிமுத்தாறு முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் சிவன்பாபு, அம்பை ஒன்றிய துணை செயலாளர் பிராங்களின், வக்கீல்கள் சுரேஷ், ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்