அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

வள்ளியூரில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-09-17 18:35 GMT

வள்ளியூர் (தெற்கு):

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் வள்ளியூரில் நடைபெற்றது. நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயண பெருமாள், மாவட்ட விவசாய அணி லாசர், மேற்கு ஒன்றிய செயலாளர் அமலராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், உவரி கிருபாநிதி ராஜன், திசையன்விளை பேரூராட்சி தலைவி ஜான்சிராணி, திசையன்விளை பேரூர் செயலாளர் ஜெயக்குமார். வள்ளியூர் பேரூர் செயலாளர் பொன்னரசு உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பால்துரை செய்து இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்