தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர வேண்டும் -தமிழ்மகன் உசேன் பேச்சு

தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர வேண்டும் என்று தமிழ்மகன் உசேன் பேசினார்

Update: 2022-11-29 20:11 GMT

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடியில் உள்ள கருத்த பக்கீர் ஒலியுல்லா தர்காவில் அ.தி.மு.க. அவை தலைவரும், முன்னாள் வக்பு வாரிய தலைவருமான தமிழ்மகன் உசேன் சிறப்பு தொழுகை செய்தார். பின்னர் அவர் கூறியதாவது, தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர வேண்டும், முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என, தமிழகத்தில் உள்ள 75 பள்ளிவாசல் தர்காவிற்கு சென்று சிறப்பு தொழுகை மேற்கொண்டு வருகிறேன். இஸ்லாமிய சமுதாய மக்களை கட்டி காப்பாத்திய ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான்.உலமாக்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்தது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தான். நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கு பல டன் அரிசியை இலவசமாக கொடுத்தது அ.தி.மு.க. ஆட்சி தான். மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மலர வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலோடு, கூடவே சட்டமன்ற தேர்தல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வரவேண்டும் என்பது பொதுமக்களின் விருப்பமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிச்செழியன், வடக்கு ஒன்றிய செயலாளர் குலோத்துங்கன், கருங்காலக்குடி கிளைச் செயலாளர் ஹபிபுல்லா சேட் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜபார் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்