அ.தி.மு.க. இளைஞர் பாசறை நிர்வாகிகள் கூட்டம்

நெல்லையில் அ.தி.மு.க. இளைஞர் பாசறை நிர்வாகிகள் கூட்டம் நடந்தது

Update: 2022-11-25 21:25 GMT

வண்ணார்பேட்டை:

நெல்லையில் அ.தி.மு.க. இளைஞர்-இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். இளைஞர்-இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவன் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட பாசறை செயலாளர் முத்துபாண்டி வரவேற்றார். இதில், வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒருவரை தேர்வு செய்து இளைஞர்-இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வெற்றி பெற வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், அமைப்பு செயலாளர்கள் சுதா பரமசிவன், ஏ.கே.சீனிவாசன், முன்னாள் எம்.பி. முத்துகருப்பன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயண பெருமாள், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், பொருளாளர் சவுந்தரராஜன், மகளிர் அணி செயலாளரும், திசையன்விளை பேரூராட்சி தலைவியுமான ஜான்சி ராணி, இளைஞர் அணி ஸ்ரீவை சின்னதுரை, மாநகராட்சி கவுன்சிலர் சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் முத்துகுட்டி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்