அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் 21 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு

அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் 21 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு

Update: 2022-06-28 19:17 GMT

பெரம்பலூர்:

பொதுக்குழு உறுப்பினர்கள்

அ.தி.மு.க.வில் தற்போது ஒற்றைத்தலைைம விவகாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன், துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளர் ஆவார். இதனால் அவர் தற்போது ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக உள்ளார்.

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலில் பெரம்பலூர் நகரம், பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் மற்றும் செந்துறை ஆகிய ஒன்றிய பகுதிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இருந்து ஏற்கனவே 22 பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட மாணவரணி செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் தலைமையில் மாவட்டத்தில் அ.தி.மு.க.வில் உள்ள 21 பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னையில் நடந்த பொதுக்குழுவில் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். மேலும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக உள்ள நிலையில், 21 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்