வேளாண், தோட்டக்கலை படிப்புக்கு மாணவர் சேர்க்கை

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண், தோட்டக்கலை படிப்புக்கு மாணவர் சேர்க்கை வருகி்ற 13-ந் தேதி நடக்கிறது.

Update: 2023-10-09 18:39 GMT

அண்ணாமலைநகர்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புலத்தில் சுயநிதி வேளாண் பட்டப்படிப்பில் வேளாண்மை(பி.எஸ்சி), தோட்டக்கலை(பி.எஸ்சி) ஆகிய படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட(முஸ்லிம்) வகுப்பை சேர்ந்தவர்களுக்கு இருக்கும் காலியிடங்களுக்கு உடனடி மாணவர் சேர்க்கை வருகி்ற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 12 மணி வரை அண்ணாமலைபல்கலைக்கழக வேளாண் புலத்தில் நடைபெற உள்ளது.

இதில் சேர விரும்பும் மாணவர்கள் மேற்படி தேதியில் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்திற்கு சென்று குறிப்பிட்ட நேரத்தில் நேரடியாக பங்கேற்க வேண்டும். பொது கலந்தாய்வில் இடம் கிடைத்து கலந்தாய்வை தவறவிட்டவர்களும், விண்ணப்பிக்க தவறியவர்களும் இந்த நேரடி மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் மாணவர் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு அதன்படி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் இடம் கிடைக்கும் என உத்தரவாதம் அளிக்க இயலாது. இதுபற்றிய விவரங்களை https://annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) சிங்காரவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்