மாணவிகள் சேர்க்கை

ராணி அண்ணா அரசு கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை

Update: 2022-08-02 21:21 GMT

பேட்டை:

நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கான இளங்கலை மற்றும் இளம்அறிவியல் பாடப்பிரிவில் மாணவிகள் சேர்க்கை நடக்கிறது. இன்று (புதன்கிழமை) ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், தேசிய, மாநில, மாவட்ட அளவிலான விளையாட்டு வீரர்கள், ஆயுதப்படை வீரர்களின் வாரிசுகள், மலைவாழ் பழங்குடியினர், தேசிய மாணவிகள் படையில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கான சிறப்பு ஒதுக்கீடு நடக்கிறது.

5-ந் தேதி இளங்கலை படிப்புகளான பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம். வணிகவியல், 6-ந் தேதி பி.எஸ்சி. கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவிற்கும், 8-ந் தேதி பி.எஸ்சி. தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் மற்றும் புவியமைப்பியல் பாடப்பிரிவிற்கும், 11-ந் தேதி பி.ஏ. வரலாறு, பொருளியல் பாடப்பிரிவிற்கும், 12-ந் தேதி பி.ஏ. மனிதவள மேம்பாடு, சமூகவியல் மற்றும் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் பாடப்பிரிவிற்கும் கலந்தாய்வு நடைபெறும்.

கலந்தாய்வில் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்குப்புத்தகம் இவற்றின் ஒரிஜினல் சான்றிதழ்களுடன், நகல் 5 பிரதிகள், புகைப்படம் 5 பிரதிகள் எடுத்துக்கொண்டு தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொள்ள வேண்டும். கலந்தாய்வில் கலந்து கொண்டு தேர்வு பெற்றவர்கள் சேர்க்கைக் கட்டணத்தை இணையதள முகவரியில் செலுத்த வேண்டும் என கல்லூரி முதல்வர் மைதிலி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்