தேர்வுக்கு வராத 10 மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு

தேர்வுக்கு வராத 10 மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

Update: 2023-04-13 19:00 GMT

பெரம்பலூர் அருகே எளம்பலூர் இந்திரா நகர், எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளில் 10 பேர் நீண்ட நாட்களாக அவர்கள் பயிலும் பள்ளிக்கு செல்லாமலும், தேர்வு எழுத செல்லாமலும் இருந்தனர். இதனையடுத்து அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்காக, கல்வித்துறை அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை குழுவாக சென்று தேர்வுக்கு டிமிக்கி கொடுத்து விளையாடி கொண்டிருந்த அந்த 10 மாணவ-மாணவிகளை மீட்டு, அவர்களின் பெற்றோர்களை சந்தித்து கல்வியின் முக்கியத்துவத்தையும், அரசின் நல திட்டங்களையும் எடுத்துக் கூறி அறிவுரைகள் வழங்கினர். பின்னர் அந்த 10 மாணவ-மாணவிகளும் அவர்கள் பயிலும் எளம்பலூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். மேலும் அவர்கள் ஆண்டு இறுதி தேர்வு எழுதவும் அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்