அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை

அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

Update: 2023-06-01 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2023-2024-ம் கல்வியாண்டில் முதலாமாண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கான முதல் பொது கலந்தாய்வின் 2-வது சுற்று வருகிற 5-ந் தேதி முதல் 7-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 5-ந்தேதி பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் (பி.சி.ஏ) மற்றும் பி.எஸ்சி. புவி அமைப்பியல் பாடப்பிரிவுகளுக்கும், 6-ந்தேதி வணிகவியல் (பி.காம்.), தொழில் நிர்வாகவியல் (பி.பி.ஏ.) பாடப்பிரிவுகளுக்கும் நடக்கிறது.

7-ந் தேதி பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும் பொதுக்கலந்தாய்வு நடைபெறும். இதில் கலந்துகொள்ள வரும் மாணவ-மாணவிகள் தங்களது 10 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், அசல் மற்றும் 2 நகல்கள், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விண்ணப்ப படிவத்தின் அனைத்து பக்கங்களையும் உள்ளடக்கிய நகல்களையும் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்