வீரபாண்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்

வீரபாண்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது.

Update: 2023-05-29 21:00 GMT

தேனி அருகே வீரபாண்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு வந்தது. இதையொட்டி ஏராளமான மாணவ-மாணவிகள் கல்லூரியில் சேர விண்ணப்பித்து இருந்தனர். இந்தநிலையில் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. கல்லூரி முதல்வர் உமாதேவி தலைமை தாங்கி, கலந்தாய்வை தொடங்கி வைத்தார். அப்போது சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் கல்லூரியில் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு சேர்க்கை அனுமதி கடிதத்தை வழங்கினார்.

கலந்தாய்வில் நாளை மறுநாள் வரை அனைத்து பாடப்பிரிவுக்கும் சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதன்பிறகு 1-ந்தேதி பி.எஸ்சி. கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான பொது கலந்தாய்வு நடைபெறுகிறது. தொடர்ந்து 2-ந்தேதி பி.காம்., பி.ஏ. பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், 3-ந்தேதி பி.ஏ. தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் பொது கலந்தாய்வு நடைபெறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்