ஆதிநாயக பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

ஆதிநாயக பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-09-07 19:59 GMT

சமயபுரம், செப்.8-

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கோபுரப்பட்டி ஆதிநாயக பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் பித்ரு தோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு திருப்பணிகள் நடத்தப்பட்டது. இந்த பணிகள் நிறைவுபெற்றதை தொடர்ந்து கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.இதையொட்டி, நேற்று முன்தினம் அனைத்து மூர்த்திகள் மற்றும் விமானங்களுக்கு கர்மாங்கஸ்த்தத் திருமஞ்சனம் நடைபெற்றது.தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்றது. நேற்று காலை சாந்தி ஹோமம், பிராயசித்த ஹோமம், மகாபூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து 10.45 மணிக்கு கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.அதைத்தொடர்ந்து விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில், ஸ்ரீரங்கம் பெரிய கோவில் தலைமை அர்ச்சகர் முரளி பட்டர் சுவாமிகள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்