ஆதிதிராவிடர் நல அலுவலர் பொறுப்பேற்பு
நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பதவி ஏற்றார்.;
நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தியாகராஜன், ராமநாதபுரம் மாவட்ட தாட்கோ மேலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக குமரி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த பென்னட் ஆசீர் பதவி உயர்வு பெற்று நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, பொறுப்பேற்றுக் கொண்டார்.