ஆதிரங்கம் ஆகாச மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் ஆகாச மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் அக்ரகாரம் சேத்தியில் ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாத பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி மாத பெருந்திருவிழா நடந்தது. முன்னதாக காலையில் இருந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் எதிரே அமைக்கப்பட்டுள்ள தீ குண்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கிராமமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.