ஆதிமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா

ஆதிமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.

Update: 2023-02-12 19:53 GMT

இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் பூக்களை தட்டுக்களில் சுமந்து மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவிலுக்கு எடுத்து வந்தனர்.இதைத்தொடர்ந்து, கோவில் அர்ச்சகர் பூக்களை அம்மனுக்கு சாற்றினார். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தட்டுக்களில் பூக்களை சுமந்து ஆதிமாரியம்மன் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர். இதையொட்டி சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்