சம்பா சாகுபடிக்கான நெல் ரகங்கள் போதுமான அளவில் இருப்பு-வேளாண் அதிகாரி தகவல்

சம்பா சாகுபடிக்கான நெல் ரகங்கள் போதுமான அளவில் இருப்பு உள்ளதாக வேளாண் அதிகாரி தெரிவித்தார்.

Update: 2023-09-01 19:13 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான நெல் விதைகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நீண்ட கால ரகங்களான, ஆடுதுறை 51 என்ற ரகம் 20.65 மெட்ரிக் டன்களும், சி.ஆர். 1009 சப்-1 என்ற ரகம் 98 மெட்ரிக் டன்களும், மத்திய கால ரகங்களான ஆடுதுறை 54 என்ற ரகம் 120.21 மெட்ரிக் டன்களும், வி.ஜி.டி. 1 என்ற ரகம் 6.72 மெட்ரிக் டன்களும், ஏ.எஸ்.டி. 19 என்ற ரகம் 3 மெட்ரிக் டன்களும், ஆடுதுறை 39 (கல்சர்) என்ற ரகம் 31 மெட்ரிக் டன்களும், பி.எப்.பி.டி. 5204 (ஆந்திரா பொன்னி) என்ற ரகம் 57 மெட்ரிக் டன்களும், என்.எல்.ஆர். 34449 (நெல்லூர் மசூரி) 3.22 மெட்ரிக் டன்களும் உள்ளன. மேலும், பாரம்பரிய நெல் ரகங்களின் சாகுபடியை ஊக்கப்படுத்தும் விதமாக, நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்களின் பாதுகாப்பு இயக்கம் எனும் திட்டத்தின் கீழ் பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள் மானிய விலையில் கிலோ ஒன்றுக்கு ரூ.25 வீதம் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 10 கிலோ வழங்கப்படுகிறது. இதன்பொருட்டு, தங்கசம்பா என்ற ரகம் 3.375 மெட்ரிக் டன்களும், தூயமல்லி என்ற ரகம் 5.550 மெட்ரிக் டன்களும், சீரக சம்பா என்ற ரகம் 0.980 மெட்ரிக் டன்களும், கருப்பு கவுனி என்ற ரகம் 0.604 மெட்ரிக் டன்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்