சுகாதார ஆய்வாளர்களுக்கு கூடுதல் பணியிடம் ஒதுக்க வேண்டும்

கொரோனா காலத்தில் பணியாற்றிய சுகாதார ஆய்வாளர்களுக்கு கூடுதல் பணியிடம் ஒதுக்க வேண்டும்; முதல்-அமைச்சருக்கு கோரிக்கை

Update: 2023-07-13 18:45 GMT


தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்க தலைவர் நாகை செல்வன், பொதுச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர், முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளர், பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இயக்குனர் ஆகியோருக்கு கூட்டாக அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

தற்போது சுகாதார ஆய்வாளர்கள் ஆயிரத்து 66 பணியிடங்களை நேரடி நியமனமாக மருத்துவ தேர்வு அறிவிப்பை வெளியிட்டதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் கொரோனா நோய் காலகட்டத்தில், தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் நலனுக்காக உழைத்த சுகாதார ஆய்வாளர்களுக்கும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் சுகாதார ஆய்வாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கும்படி இப்பணியிடங்களை கூடுதல் மதிப்பெண் வழங்கி இப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்