அரசு பள்ளியில் ரூ.20 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்

அரசு பள்ளியில் ரூ.20 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறக்கப்பட்டது.

Update: 2023-10-26 19:00 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் பெத்தநாடார்பட்டி ஊராட்சி பூபாலசமுத்திரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது. மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

பெத்தநாடார்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சௌ.ராதா, வார்டு உறுப்பினர் கார்த்தீசன், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் சேர்மதுரை, ஆலங்குளம் நகர ஓ.பன்னீர்செல்வம் அணி செயலாளர் சுபாஷ்சந்திரபோஸ், ஒன்றிய செயலாளர்கள் ஆலங்குளம் செல்லத்துரை, பாப்பாக்குடி அய்யாதுரை, நிர்வாகிகள் அன்பு, நடராஜன், ஒப்பந்ததாரர் மாடசாமி மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், தலைமை ஆசிரியை விமலாபீட்டர் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்