வேளாங்கண்ணி பள்ளி மாணவனுக்கு நடிகர் விஜய் சான்றிதழ் வழங்கினார்

திருப்பத்தூர் வேளாங்கண்ணி பள்ளி மாணவனுக்கு நடிகர் விஜய் சான்றிதழ் வழங்கினார்.

Update: 2023-06-18 17:42 GMT

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்களை அழைத்து சென்னையில் நடிகர் விஜய் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட அளவில் பிளஸ்-2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் முகேஷை பாராட்டி நடிகர் விஜய் சான்றிதழ் வழங்கினார்.

இது குறித்து பள்ளி மாணவன் முகேஷ் கூறுகையில் வேளாங்கண்ணி பள்ளி சார்பில் முதல் மதிப்பெண் பெற்றமைக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜய் பாராட்டி பரிசு, சான்றிதழ் வழங்கியது பள்ளிக்கும் மற்றும் ஆசிரியர்கள், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கிடைத்த பெருமை என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்