நடிகர் நாசரின் தந்தை மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

திரைப்பட நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-10 14:57 GMT

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நாசர் பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ் மொழியில் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, மலையாளம்,ஆங்கிலம், கன்னடம், உள்ளிட்ட பல மொழிகளில் படங்களில் நடித்திருக்கிறார். எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அருமையாக நடிக்க கூடிய நடிகர் நாசர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒருவராக இருக்கிறார்.

இந்த நிலையில், நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா காலமானார். அவருக்கு வயது 94. கடந்த சில ஆண்டுகளாக மாபுப் பாஷா உடல் நிலை சரியில்லாமல் செங்கல்பட்டு மாவட்ட்டத்தில் தனது மற்றோரு மகன் (நாசரின் சகோதரர்) வீட்டில் இருந்த நிலையில் இன்று உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக நாசரின் தந்தை காலமானார்.

நாசர் முன்னனணி நடிகராக வளர்ந்து வருவதற்கு முன்பு அவருடைய தந்தை மாபுப் பாஷா செங்கல் பட்டில் தன்னிடம் வரும் பழைய நகைகளை பாலிஷ் போட்டுக்கொடுத்து அதில் வரும் சொற்ப பணத்தை வைத்து தான் தன்னுடைய குடும்பத்தை கவனித்து வந்தாராம்.

நாசர் சிறு வயதில் இருந்த போதே அவர் ஒரு நடிகராக ஆகவேண்டும் என்று தான் அவருடைய தந்தை விரும்பினாராம். தந்தையின் ஆசைக்காகவே, நாசர் நடிப்பு பயிற்சிக்காக கூத்து பட்டறையில் சேர்ந்து பயிற்சி எடுத்துக்கொண்டாராம். பிறகு பட வாய்ப்புகள் கிடைக்க அடுத்ததாக தொடர்ச்சியாக படங்களில் நடித்து முன்னனணி நடிகராக வளர்ந்து இருக்கிறார்.

தந்தையின் ஆசைக்காக நடிகராக வளர்ந்து நாசர் தன்னுடைய தந்தைக்கு பெருமையும் சேர்த்து கொடுத்துவிட்டார். மாபுப் பாஷா மறைவுக்கு ரசிகர்கள் இரங்கலை தெரிவித்துவிட்டு நாசருக்கு ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில், முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

மூத்த நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசர் அவர்களின் தந்தை மாபுப் பாஷா வயது மூப்பு காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து வருந்துகிறேன். தந்தையின் மறைவால் வாடும் நாசர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்